பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானி புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மேலும், பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி, சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதிசெய்ய முடியும் என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி
9 மாவட்டங்களுக்கான ஊரக
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
