தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனை தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் ஒரு கடையை திறந்து வைக்க அழைத்து இருந்தனர்.
அங்கு அவரை காண நிறைய ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். காரில் வந்து இறங்கிய அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்து காருக்கு அவர் திரும்பியபோது ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் அனுபமா பரமேஸ்வரன் சிக்கினார். அனுபமாவுடன் ரசிகர்கள் முண்டியடித்து சிலர் கைகுலுக்கி செல்பி எடுத்தனர்.
அவரை காரில் ஏற விடாமல் தடுத்து ரகளை செய்தனர். செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் அனுபமா காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமா தவித்தார். உடனே கடை ஊழியர்களும், போலீசாரும் ரசிகர்களை விரட்டி அனுபமாவை மீட்டு வேறு ஒரு காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளப
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
