மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வுகளில் விரிவான கருத்துக்களை வெளியிட்ட அனுரகுமார, பொதுமக்களிடம் சில முக்கிய கோப்புக்கள் வெளிப்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.
குறித்த பதிவில் 'உரிமையாளர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்' என பதிவிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக சமகால அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த ஆவணங்கள் ராஜபக்ச அரசாங்கத்தினை கவிழ்க்க கூடிய ஆவணங்களாக இருக்கலாம் என சமூக வலைத்தள வாசிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
