அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை குறித்த புதிய தீர்மானது நாட்டின் அரசியலமைப்பினை மீறுவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திரிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய தீர்மானத்தில் இறுதி உள்ளடக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கேரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் அமெரிக்கா, பிரித்தானிய, கனடா உள்ளிட்ட நாடுகளின் கரிசனைகளும் ஒத்துழைப்புக்களும் தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
சாத்தியமான சமமான விநியோகத்தை
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
