இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்த நிலையில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் போட்டியின் 7-வது ஓவரில் மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர்.
பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். பின்னர் பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர். மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைபட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டி நடைபெற்று வரும் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
