மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று (திங்கட்கிழமை) மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி உள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
