ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப் புலியிடமே வனவிலங்கு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
பிறந்து பத்து நாட்களே ஆன நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் மற்றும் பெண் என இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில் அடிப்பகுதியில் இருப்பதை அப்பகுதியில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.
இதனை அடுத்துஇ தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
தோட்ட அதிகாரி உடனடியாக நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தைப்புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தாய்புலிக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் தாய் சிறுத்தைப்புலி சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தாய் சிறுத்தைப்புலி வந்து முதலில் ஆண் சிறுத்தைப் புலிக்குட்டியை எடுத்துச் சென்றதாகவும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு பெண் சிறுத்தைப் புலிக்குட்டி வனப்பகுதிக்குச் எடுத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
