காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்து உள்ளது.
ஸ்ரீநகர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்பவா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். எனினும் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது.
அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் இன்று மதியம் 12 மணியளவில் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. காலை 11.45 மணிவரை நன்றாக இருந்தபடி காணப்பட்ட ஜூம் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டது. பின்னர் உயிரிழந்து விட்டது என ராணுவம் தெரிவித்து உள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந அ.தி.மு.க.  தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
