மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிசார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று 14ம் திகதி காலை 6மணிமுதல் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று மாலை 5.27 மணி முத
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
