போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பாதிக்கப்பட்ட மாணவியும் இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்துள்ளனர். இளைஞன் போதைக்கு அடிமையானதால் மாணவி காதல் தொடர்பினை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார்.
அதன் போது அங்கிருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அதனை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
