More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!
Oct 19
எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!

கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 



சென்னை அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 



இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கையில் உட்கார்ந்திருந்தார். 



அதேபோல் 2-வது நாளான நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் அதே இருக்கையில் அமர்ந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி கோஷம் எழுப்பினர். ஆனால் சட்டசபை விதிகளை கூறி சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்தார். இதனால் சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 



சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் வள்ளுவர்கோட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 



போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி நடைபெறும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Jun20

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத

Apr03

புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட

Mar26

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந

Sep24

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Apr02

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர

Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Jun01

கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ

Apr02

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய

May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Feb12

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி

Oct04

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Aug14

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (15:54 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (15:54 pm )
Testing centres