குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குத்தகை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும்.
குத்தகை நிறுவனங்கள் தொடர்ந்தும் பேருந்துகளை பொறுப்பேற்க இடமளிக்க முடியாது.
தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
இல்லையெனில் பேருந்து போக்குவரத்தில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்.
இந்த போராட்டத்தில் அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சங்கம், அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், ஐக்கிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன ஈடுபடும் என அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
