50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் வரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முடிவில் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்ற உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் வரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
