புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
300 நாட்களாக போர்
ரஷ்யா - உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளன.
மாஸ்கோவிற்கும், கீவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான முறிவு ஏற்பட்ட போதிலும், இந்த வீரர்கள் பரிமாற்றம் நடந்துள்ளது.
இந்த கைதி பரிமாற்றத்தில் உக்ரைன் மொத்தம் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேபோன்று, ரஷ்யா 140 உக்ரேனியர்களை ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான Andriy Yermak தெரிவித்துள்ளார்.
அவர்களில் 132 பேர் ஆண்கள் மற்றும் 8 பேர் பெண்கள் என்றும், அவர்கள் அனைவரும் மரியுபோல் மற்றும் பாம்புத் தீவில் பாதுகாக்க போராடினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
