உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வழக்கு விசாரணையை மார்ச் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (28) தீர்மானித்துள்ளது.
வழக்கின் 17ஆவது பிரதிவாதி கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, குறித்த பிரதிவாதி உயிரிழந்துள்ளதால் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பின்னர் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்தது.
இதையடுத்து, விசாரணையை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
