நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கௌ;ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ பிரதேச சாரதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கபட்ட போதிலும் வீதியின் புனரமைப்பு பணிகள் இடையில் இடைநிறுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும் தற்போது இந்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் இந்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எமது வீதியினை புனரமைத்து தராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் வாக்கு கேட்டு வரவேண்டாம் என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியதோடு பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி பொகவந்தலாவ நகர் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
