ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நிலையங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் சின்டி மெக்கெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் 28ஆம் திகதி இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவன அதிகாரிகளை அவர் இதன்போது சந்தித்து பேசவுள்ளார்.
அத்துடன் மத்திய மாகாணத்திற்குச் சென்று பாடசாலைகள்,விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் குறித்து ஆராயவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதி மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய மூன்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறது.
அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய ஐக்கிய நாடுகளின் திட்டங்கள், நாடுகளின் உணவுப் பாதுகாப்பு, மனிதாபிமான நிவாரணம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
