நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப்படும் மீன் குழம்பில் இருந்த சில மீன் துண்டுகள், அரச பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவில் விஷமாகியதற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் மீன் துண்டுகள் அரசாங்க பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உணவருந்திய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான சுகவீனம் காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடுமையான குற்றச்சாட்டு
நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் வெளியானதையடுத்து, சிற்றுண்டிச்சாலை திணைக்கள அதிகாரிகள் மீது நாடாளுமன்ற பொதுச்செயலாளர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
