சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களை கருத்தில் எடுக்கப்போவதில்லை என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி வெளியாகியுள்ள முகநூல் பதிவுகள் குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர்இ எவரும் கேலிசெய்யலாம் விமர்சிக்கலாம் அவர்களை பற்றி யாருக்கு கவலை என தெரிவித்துள்ளார்.
போதியளவிற்கு விமர்சித்துவிட்டோம் கேலி செய்துவிட்டோம் என அவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் இந்த நாட்டின் மக்களிற்கு விமர்சனத்துடன் கேலி செய்ய மாத்திரம்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் மக்களிற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள ஞானசார தேரர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டதை விமர்சித்து கேலியான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அவரை அழைத்தமை நாட்டின் முஸ்லீம்களை அவமரியாதை செய்தமைக்கு சமமானது என முகநூலில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
<
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
