ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஹொரண குருகொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து, இலிபா பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலையின் பேருந்து, பாடசாலையருகே நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்தின் பின்புறம் மோதியதையடுத்து பாடசாலை பேருந்து சுமார் நூறு மீற்றர் முன்னோக்கிச் சென்று மின் கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது பாடசாலை பேருந்தில் மாணவர்கள் இல்லை என்றும் மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் இதன்போது ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் சுமார் நாற்பது ஊழியர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை தொழிற்சாலையின் பேருந்து சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்குà
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலைà
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு à
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத விà
நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிடà¯
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுடà®
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்à®
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக à
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உà®
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாறà¯
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்à®
