அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொ்ர்ந்து வலுவடைந்து வந்தது. இன்றைய தினமும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 40,000 வரை குறைந்திருந்தது.
கடந்த காலங்களில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 180,000க்கும் மேல் இருந்தது. எனினும் நேற்றைய தினம் சுமார் 133,000 வரை விலை குறைவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வோளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கையில்,
தங்கத்தின் விலை திடீரென பாரியளவில் குறைந்து வருவதால் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாலேயே இன்று தங்கத்தின் விலை அதிகரித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
