நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட பௌத்த பீடங்களான அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்..
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக அழுத்தத்தை ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்வார் என நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் சார்பான கொள்கைகளை அமுல்படுத்த அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டுமென மகாநாயக்க தேரர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்காக கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய கோட்பாடுகளின் அடிப்படையில் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
