பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்
இவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணினி வகுப்பிற்குச் சென்ற குறித்த யுவதி இரவு வெகுநேரமாகியும் பஸ் வராத காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த யுவதியை வீட்டினுள் இழுத்துச் சென்றதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, குறித்த நபர் யுவதியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
