அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது. இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
அங்கு மின் கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் பலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் டஜன்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதன்படி மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
இதன் மூலம் அங்கு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணி துரித கதியில் நடந்து வருகின்றது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்ட
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
