கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெடிஹிதி கந்த பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதால், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
காயமடைந்தவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 46 வயதுடைய பிரதீப் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டின் போது பின்னால் இருந்தவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
