வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் நுகயாய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், கெப் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
