More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?
Apr 05
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்தார். 



இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் நடிகை ஸ்டார்மியின் இந்த தகவலால் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. 



இதையடுத்து இவ்விவகாரத்தை பற்றி ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடி டிரம்ப் கொடுத்தார். அந்த பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 



இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 



இதையடுத்து நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. கோர்ட்டில் ஆஜராக புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்குக்கு டிரம்ப் வந்தார். பின்னர் கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் அவர் கைது செய்யப்பட்டார். 



அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் விசாரணை தொடங்கியது. 



டிரம்ப் தனது வக்கீல்களுடன் நீதிபதி முன்பு அமர்ந்திருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டிரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார். 



தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் கோர்ட்டில் இருந்த டிரம்ப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியேறிய அவர் புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச

May02

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்à

Jul05

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகà

Apr08

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொலà

Oct03

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டà®

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

May23

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்à®

Mar23

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்

Feb25

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசà¯

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்நà

Mar20

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ

Mar04

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்

Mar25

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவரà

Feb07

 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:45 pm )
Testing centres