யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை ஏற்பட்டது. சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய விடுதியின் முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரினது பெயர்கள் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு பேரில் இருவரே அன்றைய தினம் முதல் காணாமல் போயுள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும
