களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பெணிணடம், வீடு ஒன்று வாடகைக்கு தேவை எனக் கேட்டு அங்கு 3 இளைஞர்கள் சென்று அந்த பெண்ணிடம் கதை கொடுத்துக் கொண்டனர்.
இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை நடத்திவிட்டு அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
