கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.
வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
