எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் விவசாய நிலம் ஒன்றில் பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறித்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப
