யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவுகளினாலும் போராட்டங்களினாலும் மீண்டும் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இத்திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால், அதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிதியுதவியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கி கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும் வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை என்பதையும் ஏதேனும் சேகரிப்புகள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை என்பதனையும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
