மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன் அவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
