மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேச்சல் தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று (20) பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டமாக பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை ,பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம் ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கொண்ட பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் விலகிச் சென்றனர்.

எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
