18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய சரத் பொன்சேகா, 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்க 75 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க போராடும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என்றாலும், நிதி பற்றாக்குறை மற்றும் தளவாட சிக்கல்கள் திட்டத்தை செயற்படுத்த தடையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவப் பயிற்சி அளிக்க இதுபோன்ற நிதியை முதலீடு செய்யும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
