கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதனால் தொற்று பரவுவதற்கான ஆதாரங்கள் எவையும் வெளிப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் எனவும் இலங்கையை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்
