விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், முறியடித்துள்ளது.
வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ரொக்கெட், புவி வட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும், முதல்கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதேசமயம், ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இதில், அரசாங்கம் தொடர்பான மற்றும் வணிகரீதியானவை 133 செயற்கைக் கோள்கள் ஆகும். 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் ஆகும்.
12 ஆயிரம் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் செய்மதி இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
ஜனவரி 18 , 2021
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்ற தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
