யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
