ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ராஷ்ட்ரீய ரைபிள் படையினர், சிறப்பு நடவடிக்கை குழுவினர், காஷ்மீர் போலீசார், மத்திய ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தை சீல் வைத்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. பின்னர் இந்த சண்டை ஓய்ந்தது.
பயங்கரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்பு படைகள் சார்பில் கூறப்பட்டது. அவர்கள் உடனே சரண் அடையவில்லை. இருப்பினும் அப்பகுதியில் இருந்து அவர்கள் தப்பிவிடாதபடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர் மீது பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டதில் காயம் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.
அதன்பின், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து, 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் முன் நேற்று அதிகாலை சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
9 மாவட்டங்களுக்கான ஊரக
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ தமிழகத்தில்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
