வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த செயின்களை அறுத்துச்சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 9 பவுண் தங்க நகைகள் மற்றும் கைக்குண்டு, வாகன இலக்கத்தகடுகள், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் அழகியவண்ணவின் வழிகாட்டலில் சாயன்களான திசாநாயக்க, விக்கிரமசூரிய, குமணசேகர, சதுரங்க, கான்ஸ்டபிள்களான தயாளன், ரணசிங்க, தம்மிக, சமீர, மொறவக்க, அமரசூரிய ஆகியோர்களை கொண்ட காவற்துறை குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
இலங்கையின
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
