திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் "விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு இவ் வலயத்திற்குட்பட்ட ஏழு (07) பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று (03) வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பணிமனை கேட்போர் கூடத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை தலா 50 ஆயிரம் ரூபா வீதம் ஏழு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
இதில் முறைசாரா கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ் கே பிரபாகரன் ஆசிரிய ஆலோசகர் கே அகிலன் உட்பட பலரும் கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இதன் போது கரம் போர்ட், பேட்மிட்டன் , உதைபந்து, பிரிஸ்டல் வோ
கிரிக்கெட் விளையாட்டுக்கான பந்து, வெட் மட்டைகள் மற்றும் மெத்தை, சித்திரங்கள் வரைவதற்கான உப காரணங்கள் என பல்வேறு விளையாட்டு உபகரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப் பொருட்களை இவ் வலயத்தில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள கல்வி கற்கும் பாடசாலைகளான தி- வெள்ளை மணல் அல் அஹ்ஸர் வித்தியாலயம், தி- மாதுமை அம்பாள் வித்தியாலயம்,
தி-புல்மோட்டை அறபாத் வித்தியாலயம், தி- சண்முகா இந்து மகளிர் கல்லூரி, தி-கலைமகள் மகா வித்தியாலயம், தி- இராஜகிரிய வித்லோக வித்தியாலயம், தி-.விக்னேஸ்வர மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
