அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில் தவறு ஏற்பட்டதால் தனது மூக்கு பகுதி பாதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் சீன நடிகை ஒருவர் அவ்வாறான சத்திரசிகிச்சைகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்படும் பாடகியும் நடிகையுமான கவோ லியு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் அவர் அண்மைய மாதங்களில் பொதுவெளியில் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் வெய்போ சமூக ஊடகத்தில் தான் பொதுவெளிக்கு வராதது பற்றி விளக்கி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் செய்துகொண்ட அழகுக்கான அறுவைச் சிகிச்சை காரணமாக தனது மூக்கின் நுனிப் பகுதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது புகைப்படத்தை ஐந்து மில்லியன் பின்தொடருனருக்கு பகிர்ந்துள்ளார். இது சீனாவில் அதிக பிரபலமான அழகுக்கான சத்திரசிகிச்சை பற்றி அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மூக்கை கூர்மையாக்கிக் கொண்டால் தனது எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் என்று நம்பியே இந்த சத்திர சிகிச்சையை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிப்பின் அளவு காரணமாக அடுத்த ஓர் ஆண்டுக்கு தனது மூக்கை சீர் செய்வதற்கு மாற்று சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
