கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று (07) அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த வைத்தியரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.
கொரோனா தொற்று பீடிக்கப்பட்ட குறித்த வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்தவாரம் உயிரிழந்திருந்தார். அவர் ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்திருந்தார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி நிகழ்வில் அரச அதிபர் சமன் பந்துலசேன, வைத்தியர்களான சுதாகரன், மதுரகன், நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், சிறுவர் நன்னநடத்தை அதிகாரி கெனடி, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
