மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
கலைமாமணி விருது பெற்ற முத்துலட்சுமி, தவில் வித்துவான் சுப்பையா உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி, மரியாதை செய்த ஸ்டாலின், தொடர்ந்து மக்களிடம் பெற்ற மனுக்களை பெட்டியில் வைத்து, சீல் வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் குறைகளை 100 நாட்களில் சரி செய்வேன் எனக் கூறினார்.
அதிமுக ஆட்சியில் ஊழல் முறையில் விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் கமிஷன் கொடுத்து டெண்டர் தாரர்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தாம் நடிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்றும் ஆனால் அதற்கு அவசியமோ, தேவையோ இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ஆட்சி முடியும் காலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் விவசாயியாக நடிக்கிறார் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருமணம் ஆன ஐந்து மாதங்களில் அவசர நிலையை எதிர்த்து ஒருவருடம் சிறையில் இருந்தவன் நான் என்று கூறிய ஸ்டாலின், தியாகங்களால் ஆனது தான் ஸ்டாலினின் வரலாறு என்றும் கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
முன்னாள் முதல்-மந்திரி
பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத
