வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனா அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளதுடன், வடக்கில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
