இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த மாதம் 16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி முடிவடைந்து, மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,194 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 11,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 82,63,858 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை பிளஸ்-2 மாணவர்களுக்கு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்
