அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், அசாமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திலும் புதிய வளர்ச்சி தொடங்கியது. ஒரு காலத்தில், அசாம் என்றாலே கிளர்ச்சி மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்தது. இப்போது வளர்ச்சிக்கான மாநிலமாக மாறியிருக்கிறது.
பிரதமர் மோடி அசாமை கவுரவிக்க எல்லாவற்றையும் செய்தார். பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தருண் கோகாயும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
காங்கிரசை வெற்றி பெறச்செய்ய, பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைக்க, போராட்டக்காரர்கள் வெவ்வேறு பெயர்களில் போட்டியிடுகின்றனர். காங்கிரசை வெற்றி பெறச் செய்வதே அவர்களின் நோக்கம். அவர்களால் அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கும் அது தெரியும். ஆனால் காங்கிரசை வெற்றி பெறச் செய்வதற்காக, பாஜகவின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர்கள் முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட தமிழகத்தில்
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக் காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்
