எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
நாடு முழுவதும் உள்ள 4,513 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
நிலவும் கொரோனா பரவல் காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் சிகிச்சை வழங்குவதற்காகவும் அந்தந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்காகவும் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளினது அறைகளின் வசதிகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறியப்படுத்தவும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பரீட்சை மையங்களில் உள்ள வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உள்ளூர் சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
