சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க அங்கு ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் சிரியாவின் அல் ஹசாக்கா நகரில் உள்ள அல் ஹவுல் அகதிகள் முகாமில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர தீ விபத்து நேரிட்டது. முகாமில் உள்ள ஒரு குடிலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததாக தெரிகிறது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த குடில்களுக்கும் பரவியது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக
ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத
