பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் உண்டானது. அதை தணிக்க விரும்பிய மோடி, அவர்களிடையே உரையாடினார். பெயர், ஊர் போன்ற விவரங்களை கேட்டார்.
புதுச்சேரியை சேர்ந்த நர்சு நிவேதா தடுப்பூசி போடவும், கேரளாவை சேர்ந்த நர்சு ரோசம்மா அனில் துணையாக இருக்கவும் ஏற்பாடாகி இருந்தது. அவர்களை இயல்புநிலைக்கு கொண்டுவர நினைத்த மோடி, அவர்களை பார்த்து, ‘‘கால்நடைக்கு போடும் ஊசியை பயன்படுத்த போகிறீர்களா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த நர்சுகள் ‘‘இல்லை’’ என்று பதில் அளித்தனர். இருந்தாலும், அவரது கேள்வியின் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.
உடனே மோடி, ‘‘ஒன்றுமில்லை. அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக தடித்த, விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா? என்று கேட்டேன்’’ என்று கூறினார்.
அதைக்கேட்ட 2 நர்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தனர். அங்கு சகஜநிலை உருவானது.
தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் அங்கிருந்த மோடி, கிளம்புவதற்கு முன்பு 2 நர்சுகளிடமும் ‘நன்றி’, ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு சென்றார்
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
தே.மு.தி.க. தலைவர்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ' கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
